Friday, 22 June 2012

ஆண் பாவம்............1




பெண் கொடுமை...... பெண்கள் பாவம்......... பெண்கள் அடிமை படுத்தப்படுகிறார்கள்.......

இதை சொல்லி சொல்லியே பசங்கள தான் கொடுமை படுத்தராங்க...........

பசங்க அவஸ்த்தையை யாராவது பேசி இருக்காங்களா..... இல்லை யோசிச்சுத்தான் பாத்து இருக்காங்களா?

பசங்க........

1. வீடு

2. காதலி

3. பொண்டாட்டி

இது 3 தான் பசங்க வாழ்க்கை...... பாக்கறதுக்கும் பேசறத்துக்கும் நல்லாத்தான் இருக்கும்......

நீங்க பையனா ? அப்படினா இதை படிக்க வேண்டாம்.... பொண்ணுக மட்டும் படிக்கட்டும் .... நம்ம அவஸ்த்தைதான் நமக்கே தெரியுமே......

இப்ப 1 வீடு.........

பசங்கனா ஜாலியா ஊரு சுத்துவாங்க கவலையே இல்லை .....

யாருங்க அப்படி சொன்னா.....

நைட் எங்க போனாலும் அப்பாக்கிட்ட இருந்து சரியா 9 மணிக்கு போன் வந்துரும் .......

ஏன் நைட் தான் ஊரு சுத்தனுமா பகலுல சுத்தலாமல்ல ....

இந்த கேள்வி கரெக்ட்டுதான் ..... என்ன பண்ணறது.... பகல சரக்கு அடிச்சுட்டு வீட்டுக்கு போனா கண்டு புடிச்சுருவங்களே

சரிங்க அப்படி பகல்லுல என்னத்தான் பண்ணறீங்க..........

அப்படி கேளுங்க.... கரெண்ட் பில் , மார்க்கெட் போய்ட்டு வரணும் , இங்க எல்லாம் போய்ட்டு வந்தாலும் அப்பாக்கிட்ட கரெக்ட்டா கணக்கு

காட்டணும்.....

இதுலயும் அக்காவோ தங்கச்சியோ இருந்தா அவ்வளோதான் ....

பசங்க நிம்மதியே போச்சு.......

ஏன் ?

நம்மல விட அவங்க கொஞ்சம் ஏன் நம்மல விட நல்லாவே படிப்பாங்க....

அதை விடுங்க நாம அடிக்கற தம் , தண்ணி எல்லா மேட்டரும் அவங்களுக்கு தெரிங்சுரும்

மறைக்கவே முடியாது..... அங்க அங்க ஆள் போட்டு வச்சு இருப்பாங்க..... என்ன பண்ணறது அவங்களுக்கு அடங்கித்தான் போகணும்....

அப்படியும் மீறீ அவங்கள அடிச்சா அவளோ தான்.... நம்ம சொந்தக்காரன் எல்லாம் போன் பண்ணி அட்வைஸ் பண்ணுவாங்க....

அட போங்க இப்ப சொல்லி இருக்கறது கொஞ்சம்தாங்க இன்னும் விவரமா சொன்னா அவ்வளோதான்......

இப்ப இது போதும் அடுத்து காதலி பத்தி ............. நெஃஸ்ட்

Tuesday, 15 May 2012

பசங்க 2


காலைல எந்திரிச்சு இப்படி எப்பவம் ஓடினது கெடையாது....

இப்ப ஓடிட்டு இருக்கேன்............

யப்பா இப்படி மூச்சு வாங்குது....... எனக்கு முன்னாடி ஒரு பெரியவரு ஓடிட்டு இருக்காரு....

அவருக்கு வயசு 50 இருக்கும்........ எனக்கு 20 தான்........

அது எப்படி அவரு எனக்கு முன்னாடி ஓடலாம்.... இன்னும் கொஞ்சம் வேகமா ஓடினேன்....

அவரை தாண்டி ஓடும் போது சிரிச்சாரு?

எனக்கும் தான் சிரிப்பு ........ அவரை ஜெய்ச்சுட்டோம்மல்ல்..............

அதுக்கு அப்பறம் 5 நிமிசம் தான்.......

எனக்கு முன்னாடி நெறைய பேர் ஓடராங்க.....

எல்லாருக்கும் வயசு 30 இல்லைனா அதுக்கும் கம்மியாதான் இருக்கும் .

இவங்களை எப்படி ஜெய்க்கரது......

அட போங்கடா ................................ உக்காந்துட்டேன்...........

பின்னாடி வந்த அந்த பெரியவரும் என் பக்கத்துல நின்னு கை காலும் ஆடிக்கிட்டு இருந்தாரு....

என்னப்பா உனக்கு முன்னாடி இத்தனை பேர் ஓடராங்க....? கேட்டார் அந்த பெரியவர்..

...................................?(சிரித்தேன்)

இன்னைக்குத் தான் பர்ஸ்ட் டைம் ஓடரயா?

ஆமாங்க...!

நான் கெழவன் என்னை முந்தி வந்துட ..................... இன்னைக்கு வந்துட்டு எல்லாத்தையும் முந்தி ஓடணும்னா? முடியுமா?

என்ன பெரியவரே ... இந்த வயசுல எல்லாத்துக்கும் புத்தி மதி சொல்லணும்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? நான் இப்ப

எதிர்திசைல ஓடினா... நீங்க எல்லாம் எனக்கு பின்னாடி தானே? புதுசா சொல்லி குடுங்க எப்ப பாத்தாலும் குத்தம் சொல்லிக்கிட்டே

இருக்கறது.

.....................?????????

தம் அடிக்கறீங்களா? பேசமா போனா என்ன அர்த்தம் ... சொல்லறதுக்கு எதாவது புத்தி மதி இருக்கா?


(1 : அப்பு இவனுக சும்மா இருக்கறதால தான்  வம்மு தும்மு பண்ணிட்டு இருக்காங்க?
 2 : அதுக்கு என்ன பண்ண சொல்லறீங்க ?
கை புள்ள : பேங்க் ஒன்னு கட்டி விடுங்க நடத்தரோம்................ )

Wednesday, 11 April 2012


பசங்க - 1.........?

இரவு 7.30

நான் என் நண்பன் வீட்டில் இருந்தேன்... அரக்க பறக்க ரெடி ஆனான்....

காரணம் புரியாமல் நான் புத்தகத்தை பொரட்டி கொண்டு இருந்தேன்.... வண்டியில் எறி உக்கார சொன்னான்.

நானும் உக்காந்தேன்..... அது தானே நண்பனுக்கு தர மரியாதை...!

நேராக வண்டி பஸ் ஸ்ட  ண்டுக்கு போனது .........

அங்கே அவனது தோழியின் அம்மா..............

அவன் மட்டும் சென்றான்...............

15 நிமிடம் அங்கு சென்றது.... உடன் சென்ற பாவத்துக்கு வேடிக்கை பத்துட்டு இருந்தேன்.....

என்னை பத்தி அவனுக்கு என்ன கவலை......

திரும்பி வரும் போது..................

நான்    : மச்சி இதுக்கா இப்படி வந்த ..... நீ குழிச்சு நான் பாத்ததே இல்லையே டா?

அவன் : அதுக்குன்னு அப்படியே போக சொல்லறியா டா மச்சி....?

நான்  :ஏன் டா?

அவன்: அவங்க என்னை பத்தி என்ன நெனைப்பாங்க ?

நான்:  என்ன நெனைப்பாங்க ?

அவன்: உனக்கு புரியாது டா? சரக்கு அடிக்கலாமா?

நான்: சரக்கு அடிச்சுட்டு எங்க போரது டா?  8 மணி டா.....

அவன்: உங்க வீடுக்கு போகலாம் டா........?

நான்: சரக்கு அடிசுட்டு எங்க வீட்டுக்கு போன எங்க அம்மா தப்பா நெனைக்க மாட்டங்கலா டா?

அதுதான் கடைசி அதுக்கு அப்பறம் அவன் என்னை எங்கயும் கூப்பிடறது இல்லை.....

இதுல  ஸ்டைல்க்கு ஒன்னும் கொரைச்சல் இல்லை
நான் கேட்டது என்ன தப்புனுதான் தெரியலை...........

Wednesday, 22 February 2012

ஆண்=பெண்


ரொம்ப நாள்களுக்கு பிறகு எழுதும் பதிவு இது....

இவளோ நாள் பெரிதாக ஒன்னும் வெட்டி முறிக்கவில்லை.......

எதோ தேடி அலைய்ந்து கொண்டு இருந்தேன்..... ஏன்? ஏதுக்கு? தெரியலை..............

மனிதன் தேடல் எப்படி இருந்தாலும்.... தொடங்கும் இடமும் முடியம் இடமும் ஒன்னுதான்...

பெண்.............................

அவளை ஏன் தேட வெண்டும்... அவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது.................

தெரியவில்லை..... ஆனால் பெண் வெண்டும்.............................

உயிரினம் அனைத்துக்கும் ஒரு துணை வேண்டும்............ அந்த துணை பெண்ணாகாத்தான் இருக்க வேண்டும்?

ஏன் பெண்?

ஆம் அவள் முக்கியம்.................. நீங்கள் வேலைக்கு போகிரீர்கள்.... எதற்க்காக ?

விதவிதமாக துணி உடுத்திக் கெள்ளவா ? ஆம் அதற்க்காகவும் தான் ..... பிறகு என் தேவைகளை தீர்த்துக்கொள்ள....

சரி உன் தேவைகள் என்ன?

உணவு

உடை

இருப்பிடம்.......

இது போதுமா.............................?

என்றும் தீர்வு இல்லாதது தான் தேவைகள்..............

தேவை இங்கு வந்து நிப்பது........ பெண் மட்டுமே.......................

சரி பெண்கள் இருந்தால் போதுமா ? அனைத்தும் சரியா?.................

அங்கும் தான் இருக்கிற்து பிரசன்னை......

இவள் அவனிடம் எதிர்பார்கிறாள்...

அவன் இவளிடம் எதிர்பார்கிறான்.....

பெண்கள் கேட்கும் ஓவ்வொரு கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இருக்கும்.....................

ஆண்கள் சொல்லும் ஓவ்வொரு பதிலுக்கும் பெண்களிடம் கேள்வி இருக்கும்.....................

சொல்ல போனால் ...............

ஆண்=பெண்

ஓருவருக்கு ஓருவர் சமம் தான்..........................

இந்த தேடல் தான் நதியாக ஒடுகிறது ......... பார்க்க அழககாத்தான் இருக்கும்.........

முடிவு..........??????????????

Friday, 23 December 2011

பெண்களை காமத்திற்காக மட்டும் பார்ப்பதை நிறுத்தவே....!

இந்த பகுதியை 18+ மட்டும் படிக்கவும்.

இந்த பகுதியில்  பெண்களின் உண்மையை சொல்லவே இதை பற்றி எழுதுகிறேன். இதை பற்றி எழுதும் முன் அதிகம் யோசித்த பின்னரே  எழுதுகிறேன்...
 என் தளத்தை படிப்பவர்களில் பெண்களும் இருக்கலாம், இருகின்றனர் . அப்படி இருந்தும் நான் ஏன் இந்த மாதிரி பதிவுகளை எழுத வேண்டும் என்று கேக்கும் தோழர்கள் உண்டு. 


நான் காமத்தை கொண்டாடவோ ! பெண்கள்  மீது  உள்ள  இச்சையையை  தனித்து கொள்ளவோ இதை நான் எழுதவில்லை . தமிழ் ஆங்கிலம் போல காமமும் ஒரு பாடம் தான்.

பெண்களை காமத்திற்காக மட்டும் பார்ப்பதை நிறுத்தவே....!
 
பெண்  ......

ஒரு பெண் தன்னை ஒருவனுக்கு எளிதாக கொடுத்து விட மாட்டாள்.... அதை பற்றிய ஆய்வு ஒன்றின் உண்மைகள்....

வெறும் உடல் கவர்ச்சி ,,, சுகம் இதற்காக செக்ஸ் வைத்து கொள்ளும் பெண்கள் மிகவும் குறைவு...!

84% பெண்களுக்கு பணிசுமை , மன அழுத்தம் இவற்றில் இருந்து விடு பட செக்ஸ் உதவுகிறது....

ஆண்கள் மீதான இரக்க குணம் கூட பெண்கள் செக்ஸ் வைத்து கொள்ள காரணம்... என்கிறது ஆய்வு .
தனக்காக சிரம படும் ஆணுக்காக பெண் குடுக்கும் முதல் பரிசு அவள்தான்.

இதற்காகவே ஆண்கள் சிரமபடுவதும் உண்டு ..... 

செக்ஸ் போர் அடிப்பதாக கருதுகிறனர்  பெண்கள் .... அவர்களுக்கு தேவை செக்ஸ்க்கு பிறகான அன்பு மட்டுமே.... தன் வேலை முடிந்ததும் தள்ளி படுக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது இல்லை. 

ஒற்றை தலை வலியை குறைக்க செக்ஸ் பயன் படுகிறது.....

நாம் பிறந்தது பெண்ணின் பிறப்புறுப்பில் தான், பால் குடித்தது பெண் மார்பில் தான். 
இதை  புரிந்தால்  பெண்கள் மதிக்கப்படுவார்கள்... 

(கருத்துக்கள் இடவும் ....தளம் பிடித்து இருந்தால் உங்கள் தோழருக்கு அறிமுக படுத்தவும்.)

Wednesday, 14 December 2011

யாருடா போன் பண்ணறது ...?

நீங்கள் போன் வச்சு  இருக்கீங்களா   ?


இது  என்ன டா  கேள்வி  ? லூசு  தனமா   இருக்குனு  நெனைக்கறிங்களா  ?


அடிகடி உங்க நம்பர்க்கு தெரியாத நம்பர்ல இருந்து    கால்ஸ் வருதா?

கவலைய  விடுங்க! அந்த நம்பெர   கண்டுபுடிக்கலாம் ....

இதோட பயன்: (ஆண்களுக்கு )

* உங்கள காவலன் படத்துல வர அசின் மாதிரி யாரும் ஏமாத்த  முடியாது .

*நண்பர்கள் யாரும் பொண்ணுக பேரை வச்சு ஏமாத்த முடியாது.

*உங்க தங்கச்சிக்கு வர தப்பான போன் கால்ஸ் கண்டுபுடிக்கலாம்.

*உங்க பெண் தோழி யாரு கூட பேசறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

(பெண்களுக்கு):


*உங்களுக்கு வர தப்பான கால்ஸ் யாருதுன்னு , உங்க லவர் கிட்ட    சொல்லி  தர்ம   அடி   வாங்கி  குடுக்கலாம்  .


*உங்களுக்கு எந்த  பையன்  நூலு   விடரான்னு   தெரிஞ்சுக்கலாம்.


* தப்பான நபர்களிடம்  இருந்து உஸ்ஸார   இருக்கலாம்   .


இந்த அம்சங்கள் பிடித்து இருந்தால் ...இங்கே கிளிக் செய்யவும்



(கருத்துக்கள் இடவும்)



Tuesday, 13 December 2011

வேலாயுதம்

விஜய் பிடிக்குமா?

பிடிக்காதவர்களுக்கு ! கூட பிடிக்கும். இந்த படம். வேலாயுதம் ......


இந்த படம் தெலுங்கு டபிங் என்ற போதிலும்.. ரசிக்க வைக்கிறது. சிறிது நாளுக்கு பிறகு வந்த  சேவாக்    அடி  பின்னி  எடுக்கலையா ! அது போல இந்த படத்தில் பின்னி  எடுக்கிறார் விஜய்.

படம் ஆரம்பித்த  15 நிமிடங்கள் மனம் நொந்து போவது உண்மைதான் .  
விஜய்- ம்  சந்தானமும் பார்க்க  வைக்கிறார்கள்.. கல கலப்புக்கு பஞ்சம் இல்லை  .  .

என்னதான் தமிழ் படமாக இருந்த போதிலும் .... அந்த தெலுங்கு பட வாசனை வீசுகிறது. சில இடங்களில் மட்டும் அல்ல, பல  இடங்களில் லாஜிக் தவறுகிறது..


விஜய், ரொம்ப நாளுக்கு பிறகு காவலன், வேலாயுதம் போன்ற கலகலப்பான  படம் குடுத்து  இருக்கிறார் .

ஹன்சிகா  கிராமத்து  பெண்    என்று  கூறுகிறார்கள் ,,, அப்படி ஒன்றும் தெரிய வில்லை ..... பஜன் லால் சேட்டு... காமெடி  நினைவில்  நிற்கிறது ....  
வழக்கம்  போல  இளவரசு வரும் சில இடங்களில் பலே   ..... ஜெனிலியா அப்படி ஒன்னும் பெருசா  இல்லை..


பாடல்:

மாயம் செய்தாயோ ? பாடல் வேகமாக சென்றாலும் ,,,, கேக்க வைக்கிறது. chilax  பாடல் ... விஜய் ஆண்டனி   சார்  இன்னும்  பிட்  அடிக்கிற  பழக்கம்  போகலையா ? 


கேள்வி:

யார் என்றே தெரியாமல் "வேலாயுதம் துணை" என்று மக்கள் எழுதி கொள்வது ஏன்?


பதில்:

ஏன்னா?  அவர்தான்டா ஹீரோ.....................   


முக்கிய  குறிப்பு :

படம் பார்க்கலாம் ......  



படத்தில் பிடித்தது:

விஜய் சந்தானம்  காமெடி ..... விஜய் நடனம் ......



படம் பார்க்கும்  போது :

"வேலாயுதம் சாகல " இதை  விஜய் சொல்லும்  பொது .... தியேட்டர்'ல செம்ம  சவுண்ட் ....... இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும் போது!!!!!!!!!!!!
 படம் கண்டிப்பா 1000௦ நாள் தான்....    

மதிப்பெண்கள் : 50  க்கும் மேல் 

படத்தின் பற்றி மேலும் தெரிந்து கொள்ள.....இங்கே கிளிக் செய்யவும் .....

(கருத்துக்கள் தெருவிக்கவும் )

Thursday, 8 December 2011

தெரு கூத்து 2


சேவாக் 219 



இந்த செய்தியை கொண்டாடுபவராக நீங்கள் இருந்தால் இந்த பகுதியை வாசிக்க வேண்டாம்.

இதை எழுதும் நான் சச்சின் ரசிகன். இதை படிக்கும் நீங்கள் கூட அவரின் தீவிர  ரசிகராக இருக்கலாம். அந்த அளவுக்கு எனக்கும் கிரிக்கெட் விளையாட தெரியாது. ஏதோ விளையாடுவேன், கிரிக்கெட் விளையாடினால்  ரசித்து பார்ப்பேன்.

சச்சின் , இந்த பெயர்  கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றும். ?

கிரிக்கெட்.

இந்த மாதிரி யார் பெயர் கேட்டாலும் தோன்றுபது இல்லை. கிரிக்கெட் என்றாலும் சச்சின் தான் முதலில் நினைவுக்கு வருபவர்.இந்த சிறப்பு யாருக்கும் இல்லை.தன் 16 வயது முதல் ரன் எடுத்து கொண்டே இருக்கிறார். இவர் அடிக்காத சதங்கள் இல்லை. முதன் முதலில் 200 ரன்களை எடுத்தவரும் இவர்தான். தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக இந்த இரட்டை சதத்தை அடித்தார் , அன்று முதல் இன்று வரை இவர் தான் அதிக ரன் எடுத்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

இன்று அதை சேவாக் தட்டி சென்று விட்டார், இந்த சாதனையை படைத்தவர் இந்தியர் என்ற போதிலும், மேட்ச் பார்க்கும் போது அவர் அவுட் ஆக வேண்டும் என்று வேண்டி கொண்டோம். நானும் என் நண்பனும்.

என்ன எப்படியோ ? அவர் அடித்து விட்டார். இதை சச்சின் பாராட்டுவாரே தவிர வெறுக்க மாட்டார். அவரின் ரசிகர்கள் மட்டும் எப்படி இதை வெறுப்பார்கள்.சேவாக்'ம் இந்தியர்தானே , இவரின் ஆட்டம் சச்சின் போலவே தான் இருக்கும். 

இவரின் இந்த சாதனையால் , சாதனை நாயகன் புகழ் ஒன்றும் மங்கி போகாது. அதிக ரன் எடுத்த கிரிக்கெட் வீரர் ஒரு இந்தியர்.. 

(கருத்துக்கள் மறக்காமல் இடவும் )

Wednesday, 7 December 2011

மயக்கம் என்ன ?

                           
 ஏதாவது படம் பார்க்கும் பொழுது " அட நாம மாப்ள மாதிரி இருக்கானே இந்த ஹீரோ " அப்படி தோன்றும். எனக்கும் அப்படித்தான் என் நண்பன் தினேஷ்'ஐ பார்ப்பது போல இருந்தது. அவனை பார்க்கும் போது எல்லாம் அவன் முகத்தில் சிரிப்பு இருக்கும் . கலகலப்பாக பேசுவான், எனக்கு அவன் கள்ளம் கபடம் இல்லாதவனாக தான் தெரிகிறான். அவனும் புகை படம் எடுப்பவன் தான். அவனது புகை படங்களை பார்க்க ............... இங்கே கிளிக் செய்யவும். 





மயக்கம் என்ன ?

படம் எப்படி இருக்குது ...

அதுக்கு நான் சேத்து போயிருவேன் . படம் பார்த்து விட்டு சொன்னவர்கள் இதை தான் கூறினார்கள் . எது எப்படியோ நாம போய் பார்த்தாதான் மனசுக்கு திருப்தி . அப்படித்தான் நினைத்து இந்த படத்துக்கும் போனேன். 

           அப்போதான் புரிந்தது படம் பார்த்து சொன்னவர்கள் இயக்குனர் பேரரசு ரசிகர்கள் என்று. நாலு சண்டை , வில்லனை பழி வாங்கும் ஹீரோ , வசனம் பேசியே சாகடிக்கும் நாயகன்.
இப்படியே படம் பார்த்து பழகியவர்கள் , இந்த படம் பார்த்தால் சாகத்தான் தோணும். 


         வேறு வேறு துறை'யில்  இருக்கும் நண்பர்கள். இவர்களுடன் இருக்கும் புகை பட எடுப்பதில் வளர துடிக்கும் இளைஞன் தனுஷ். தன் நண்பன் சுந்தர், தான் காதலிக்கும்  பெண்ணை தன் நண்பர்கள் பட்டாளத்தில் இணைத்து கொள்ள கூட்டி வருகிறான். அது முதல் தனுஷ்கும் ரிச்சாக்கும் மோதல் முட்டி கொள்கிறது . தனுஷ் நடிப்பு அட அட போட வைக்கிறார்  . பல்லியை பார்த்து பயப்படும் இடத்திலும் சரி, 
அது என்னோட போட்டோ 'னு வந்து சொல்லுங்க சார், இது என் லைப் என்று கலங்கும் இடத்திலும் சரி,  முதுகில் தட்டி குடுக்கலாம் போல இருக்கிறது. 

யாருடா இந்த பொண்ணு ! தனியாக கவனிக்க வைக்கிறார் ரிச்சா .. இரண்டாம் பாதியில் தன் கணவனை விட்டு எந்த நிமிடமும் பிரியாமல் இருப்பது, நமக்கே அனுதாபத்தை  வர வைக்கிறது. தன் குழந்தை கருவில் அழியும் இடத்தில பாவ பட வைக்கிறார். 

ஏதாவது சோகமா இருக்கும் போது பிறை தேடும் இரவிலே பாடல் கேட்டு பாருங்கள் ,மன  அழுத்தம் புரியும். 

கேள்வி:

தனுஷ் எதுக்கு மாடி மேல இருந்து விழணும்?

 இது ஒரு நல்ல கேள்வி?

பதில்:

அவ அவனுக்கு வந்தாதான் தெரியும் வலியும் சளியும்.  அவன் பெருசா நேனைகறதே அது ஒன்னுதான் , அதே போனதுக்கு அப்புறம் ............  ஒன்னும் இல்ல உங்க ஜட்டிய ஒருத்தன் களவாடிட்டு போறான் . உங்களுக்கு எப்படி இருக்கும் .  ஜட்டிக்கே இப்படினா அது அவன் லைப் சார்....................

படத்தில் பிடித்த இடம்:

புத்தகம் ஒன்று குப்பை தொட்டிக்கு போனதுக்கு அப்பறம் , திரும்பவும் மேசைக்கு வந்து, உயர் நிலை அடையும். அதுதான் சார் லைப்........   

படம் ௦ மதிப்பெண்கள் :60 க்கும் மேல் 

(மறக்காமல் கருத்துகள் தெரிவிக்கவும் )

Monday, 21 November 2011

புது வேலை

லீவ்'ல என்ன மச்சான் பண்ண  போற ?

சும்மாதான்டா இருப்பேன் ஏன்டா கேக்கற?

வேலைக்கு போக மாட்டிய?

இல்லை டா?

அப்பறம் செம் பீஸ்க்கு என்ன டா பண போற?

அப்பா தான் டா கட்டுவர்!

பாவம் டா உங்க அப்பா!! உனக்கு செலவு பண்ணியே ஓஞ்சு போயிருவாரு டா!

உன் வேலை கூ......யா மட்டும் பாரு டா.... நீ வேலைக்கி போன மூடிட்டு போ. என்னை  ஏன்டா கேக்கற!

இது வரைக்கும் என்னை யாராவது வேலைக்கு போறியான்னு கேட்டா இப்படிதான் முடியும்.... 
எனக்கு வேலை எதும் இல்ல.. படிக்கத்தான் போறேன் இருந்தாலும் நெறைய பேர் படிசுட்டேதான் வேலைக்கு போறாங்க, தப்பு இல்ல ..... வேலைக்கு போகாத என்னை பாத்து கேக்கறதுதான் தப்பு.

நான் அவங்கள தப்பு சொல்லல ... வேலைக்கு போக என்னால முடியல.. இருந்தாலும் அதை என்கிட்டதான் கேட்டு தெரிஞ்சுகனுமா?

இனி எவனும் என்னை அப்படி கேக்க முடியாது..

ஆமா, நான் இனி வேலைக்கு போக போறேன். என்ன வேலைன்னு தெரியாது. ஏதோ கம்ப்யூட்டர் சமந்தமா தான்னு அப்பா சொன்னாரு. அங்க ஏற்கனவே மூணு பேர்  வேலை செய்யறாங்க. நாம நாளைக்குத்தான் போக போறோம் .

புதுசாத்தான் போறேன். இருந்தாலும் அங்க இருக்கவங்க என்னை பாத்துதான் வேலை செய்யணும்னு  
ஆசை . அது தப்புதான். இருந்தாலும் நான் இப்பதானே வேலைக்கு போறேன் . அதனாலதான் ஒரே ஆர்வம். இது வரைக்கும் வீட்டுல கூட வீளை செஞ்சது இல்ல .... அபாரம் எப்படி  அங்க போய் செய்ய  போறேன். அங்க நான் ரொம்ப மக்கு பையன்னு பேரு வாங்காம இருந்தா சரி. போனாத்தானே  தெரியும், என்ன எப்படின்னு. 

அதிகம் உங்க கூட பேசமுடியாது. ஏன்னா நான் நாளைக்கு வேலைக்கு போகணும். போய் வேலை வெட்டிய பாருங்க ....................


(மறக்காமல் கருத்துக்கள் இடவும் )

உங்கள் ....... 

.

Friday, 18 November 2011

THE READER(2008)


இந்த படம் வயது வந்தோர்கானது .. தயவு செய்து சிறுவர்கள் முன் வாசிப்பதை தவிர்க்கவும்.

சின்ன பையனும் பெரிய பொண்ணும்...........




இந்த பதிவை எழுதும் போது மணி இரவு  1௦. அப்படி என்ன அவுதி,காலைல எந்திரச்சதும் எழுதி தொலைக்க வேண்டியதுதானே என்று நீங்கள் கேக்கலாம். இந்த படம் பார்த்து விட்டு அதை பற்றிய நினைவு இல்லாமல் துங்குவது அவ்வளவு சுலபமான காரியம்  இல்லை.


பள்ளி மாணவன் ஒருவன் , பேருந்தில் டிக்கெட் பரிசோதிக்கும் பெண்ணுடன் உடல் உறவு தொடர்பு வைத்து இருந்தான் என்பதை கேக்கும் போது, உங்களை அறியாமல் ஏதோ தோன்றும். அது

நம்மால முடியல ? என்ற ஆதங்கமாக ! இருக்கலாம்.

கலாச்சார சீரழிவு  என்று கூட கருதலாம். 

நான் இதில் முதல் ரகம். நம்மால் முடியல என்ற ஆதங்கம் இல்லாமல் இதை எழுத வில்லை. நானும்
மனிதன் தான், இதற்கு கவலை படாமல், பரிட்சைல் பெயில் ஆனதற்கா கவலை பட முடியும். 

இவன் ஒரு வக்கீல் , இரவில் உறவு கொண்ட விபச்சாரியை , உபசரித்து வழி அனுபவத்தில் தொடங்குகிறது படம். சிறு வயதில் தன்னை  நினைவு படுத்துகிறான்.

அந்த மழை காலத்தில் நனைந்து  உடல் நடுங்கி , ஒரு வீட்டின் முன் வாந்தி எடுக்கிறான். உங்கள் பக்கத்து
வீட்டில் எச்சை துப்பி பாருங்கள் அடுத்து  வரும் முதல் வார்த்தை, உங்கள் அம்மாவை பற்றித்தான் இருக்கும். ஆனால் அவள் அப்படி பண்ணவில்லை, அவன் வாந்தி எடுத்ததை கழுவி விட்டு,அவன் வீடு வரை சென்று விட்டு வருகிறாள் .

என்னதான் பெண் காப்பாற்றினாலும் மழையில் நனைத்த பாவம் அவனுக்கு  உடல் நலம் சரி இல்லாமல் போகிறது. சரி ஆனதும் அவளுக்கு நன்றி சொல்ல அவள் வீடு தேடி பூங்கொத்து வாங்கி செல்கிறான். அங்கே அவள் தான்  அணியும் உள்ளாடையை  இஸ்திரி போட்டு கொண்டு இருக்கிறாள். 

இவன் அவளுக்கு என்ன உதவியும் செய்ய தயாரக இருப்பதாக கூறியும் அவள் அவனை போக சொல்லி,உடை மாற்றி கொள்ள ஆரம்பிக்கிறாள். அவளும் பெண்தானே ! தன்னை  யாரோ பார்ப்பதை உணர்ந்து திரும்பி பார்க்கையில் அங்கே அவன் நிக்கிறான். அவளை பார்த்ததும், ஓடி விடுகிறான்.
அடுத்த நாளும் அவன் அவள் வீட்டுக்கு வருகிறான். நேற்று வேலை சொல்லாத அவள் இன்று, தான் வீட்டின் கீழே  இருக்கும் அடுப்புக்கரியை எடுத்து வர சொல்கிறாள். 

அப்போதானே  உடை அழுக்கு படும். அவன் உடை முழுவதும் கரி நிறமாக இருக்க , அவனை அங்கே குளிக்க சொல்கிறாள். உடை அனைத்தையும் கழட்டி அவளிடம் குடுத்து விட்டு குளிக்க   தொடங்குகிறான். 

அவனுக்கு துடைக்க துண்டு எடுத்து வரும் போது அவன் வெட்கத்தால் திரும்பி நிற்கிறான்.அவள் இவன் பின்னால் இருந்து துண்டை போற்றி துடைக்கும் போதுதான்,தெரிகிறது அவள் துண்டு துணி கூட அணியவில்லை.

டைட்டானிக் படம் பார்க்கும் போது அந்த பிட் ஸீன் நினைவு படுத்தாமல் யாரலும் இருக்க முடியாது.  அந்த நாயகியின்    உடம்புதான் , இந்த படத்திலும். ஆம் அவள்தான் நாயகி. இப்போது சொல்லுங்கள் இந்த படம் பார்த்து விட்டு நிம்மதியாக  தூக்கம்   வருமா?
                                      
அதன் பின்னால் அவர்கள் இருவருக்கும் என்ன நடக்கும், அதே தான்.அந்த சுகத்திற்காக   முதலில் பள்ளியில் இருந்து நேரமாக வருபவன், பின்பு பள்ளி செல்லாமல் வருகிறான். அவள் ஒரு கதை பைத்தியம் , கதை படித்து கட்டினால் தான் அது செய்ய விடுவாள். அதற்காக வேண்டா  வெறுப்பா கதை படித்து அவளை வேலை செய்கிறான் அவன் . போக போக அவள் அவன் காதலியாக மாறி போகிறாள் . 

உங்கள் காதலியை எங்கு எல்லாம் கூட்டி செல்வீர்கள் , அது போல அவனும் அவளை கூட்டி செல்கிறான். 
ஒரு நாள் அவள் பணி உயர்வு அடைந்து, இவனிடம் கூறாமல்  வெளிஊர் சென்று விடுகிறாள். இத்தனை  நாள் கிடைத்த சுகம் இனி கெடைக்காது. என்ன செய்வது அவனும் வக்கீல் படிப்பு படிக்க வேறு பக்கம செல்கிறான்.

ஒரு நாள் மாணவர்கள் கோர்ட்டில் நடக்கும் கேஸ்'யை பார்ப்பதற்கு    அழைத்து செல்ல படுகிறார்கள் , அங்கே குற்றவாளி இடத்தில இருப்பவள்,அவள் தான். அவன் மாறி மாறி பெண்டு எடுத்த அந்த பெண்தான். அவளை பார்த்து விட்டு இரவில் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. விடுதியில் ஒரு பக்கம் மாணவர்கள்  மது அருந்தி கொண்டாடுகிறார்கள் , ஒரு புறம் ஒருவன் ஒருத்தியை மாங்கு மாங்கு என வேலை செய்து கொண்டு இருக்கிறான் எதுலயும் உங்கள் மனம் போக வில்லை அவள் நினைப்புதான்.

அடுத்து என்ன ..................

மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ... முதல் பத்தி முழுவதும் நாயகன் நாயகி நிர்வாணமே அதிகம்.
டைட்டானிக் படத்தில் அழகு தேவதையாக வந்தவர் இந்த படத்தில் சற்று வயதான தோற்றத்தில் வது கலக்குகிறார் . அந்த சின்ன பையனிடம் அனுபவிக்கும் சுகத்தை முகத்தில் அந்த அளவுக்கு இயல்பாக காட்ட யாரலும் முடியாது.

இன்னும் என்னால் என் நண்பன் ரெடி செய்த ஆன்டியையும், என்னை தனியே தவிக்க 
விட்டுவிட்டு அவன்  போனதை  இன்னும்  மறக்க  முடியல . அதுக்குள்ள இது ஒன்னு , 

 படம் தேவை படும் நண்பர்கள் என்னை அணுகவும் ..................... கடைகளில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. 

படத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் 

மறக்காமல் கருத்து பதிவு செய்யவும்   ......................................... 
உங்கள் கருத்து தான் என் எழுத்தின் உயிர்......................................... 

taare zameen par (2007)





உங்கள் வீட்டில் நீங்கள் , அண்ணன் , அப்பா,அம்மா . அப்பா அலுவலக பணி.அண்ணன் நீங்கள் படிக்கும் பள்ளியில் உயர் வகுப்பு படிக்கிறார் . அம்மா உங்கள் அனைவர்க்கும் வேலை செய்வது அவரது வேலை. அவர் உங்கள் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார் .

நாம் இப்போது  உங்களை பற்றி மட்டும் பேசுவோம் . எதையாவது வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து பார்க்கும் நீங்கள் , இந்த படிப்பில் மட்டும் தத்தி, சரக்குக்கு ஊறுகாய் போல்  பள்ளியில் அனைத்து ஆசிரியர் கோவதிற்கும் நீங்கள் தான் ஊறுகாய். 

நீங்கள் வேணும் என்றே படிக்காமல் இல்லை . நீங்கள் புத்தகம் பார்த்து படிக்கும் போது,எழுத்துகள் நடனம் ஆடுவது போல் தோன்றுகிறது ,இதற்கு கரணம் dyslexia என்னும் நோய் . இது ஒன்றும்  புற்று நோய் போல இல்லை. நீங்கள் படிக்கும் போது உங்களால் கவனம் செலுத்த முடியாது.மூளையின் தடு மாற்றமே காரணம். இதனால் உங்கள் அப்பா உங்களை
 வேறு பள்ளியில் ஹொஸ்டலில் சேர்கிறார் .


படிகின்ற மாணவன் அருகே உக்கார வைக்கிறார்கள்.

ஏன்டா? எங்க உக்காந்தாலும் என்னால முடிஞ்சா தான்டா படிக்க முடியும்.
நீங்கள் சொல்வதை கேட்க யாரும் இல்லை.   


அம்மாவின்  பிரிவு, எழுத்துகள் நடனம், இதனால் அங்கும் நீங்கள் தான் ஊறுகாய்.
                                      

இப்போது ஹீரோ வருகிறார். 


நீங்கள் பார்த்து  வந்த ஹீரோ எப்படி இருப்பார், நாலு சண்டை, மூணு லவ் சாங்.நாயகியை 
கட்டிபிடித்து உதட்டுடன்
உதடு சேர்த்து ஒரு முத்தம். படம் முடியும் போது அவர் ஜெயித்து இருப்பார் .


இவர் அப்படி இல்லை. படத்தின் இடை வேளை பிறகு தான் வருகிறார். 
அமீர்கான், ஆம் அவர்தான் .கலகலப்பான  ஓவிய ஆசிரியர் , 
உங்களை அவர் புரிந்து கொள்கிறார் . ஏனெனில் அவர்தான்டா ஹீரோ. அவரும் 
புரிஞ்சுகலேன்னா நீ என்ன பண்ணுவ? 


என்ன ஆனது என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .........

நானே எல்லாம் சொல்லிட்டா நீங்க எப்பதான் படம் பாக்கறது. படம் பார்க்க 
ஆசை படுபவர்கள் என்னை தொடர்பு 
கொள்ளவும் . இல்லை என்றால் எளிமையான வழி, கடையில் வாங்கி கொள்ளவும். 

அந்த பையனின் நடிப்பு மட்டுமே இந்த படத்தை, அழகாக காட்டுகிறது. அமீர்கான் 
அவரின் படம் தான் இது. தொப்புள்,தொடை காட்டும் நாயகி இல்லாதது இந்த படத்தின் வெற்றி. 


பார்க்க வேண்டிய அரிதான படங்களுள் இதும் ஓன்று. 


படத்தை  பற்றி மேலும் தெரிந்து கொள்ள ....

(மறக்காமல் கருத்து தெரிவிக்கவும் ,)

Thursday, 17 November 2011

தெரு கூத்து 1





நைட் 1  மணிக்கு உங்க ஆளுக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்கீங்க ! அப்ப உங்க ஏரியா'ல வெள்ளம் வருது , உங்க தாத்தா, பாட்டி எல்லாம் நடுங்கிட்டு இருக்கும் போது அவங்களை எல்லாம் விட்டுட்டு புள்ளதாச்சி பொம்பளைய காப்பாத்த போறீங்க !!


நான் வரல நீ போய் வேற ஒருத்தரை தாட்டி விடு ! அப்படினு சொன்னா எப்படி இருக்கும்? 


உங்க ஆளு கூட பேசாம , தாத்தா பாட்டி எல்லாம் விட்டுட்டு அவள காப்பாத்த, போன அவ வரலனு சொல்லறா உங்க மனசு என்ன  சொல்லும்  ? 


அப்ப என்ன  பேச தோணும் அவகிட்ட.......... 


வேற ஒருத்தரை தாட்டி விடுன்னு  சொல்லும் போது ! என்ன யோசிக்க தோணும்? நாம என்ன அவ்ளோ கேவலமா போய்டமா? இல்ல நம்ம மேல நம்பிக்கை இல்லாம போச்சா?


என்ன வார்த்தை கேக்க தோணும்? 


இது வேற எங்கயும் நடக்கல? நம்ம திருப்பூர்'ல தான்  ! என் நண்பனுக்கு தான், இந்த பரிதாபா நிலைமை! பாவம் அவன் என்ன ஆர்வத்துல பேசிட்டு இருந்தானோ ? தெரியல . அந்த நேரத்துல அவன் வீட்டுல இருக்கும் எதையும் எடுத்து அவன் பத்தர படுத்த வில்லை . அவளை காப்பத நினைத்து போன அவனுக்கு நடந்ததுதான் இந்த கொடுமை?



அந்த பொண்ணு அவனால தனியா தூக்கிட்டு போக  முடியாது ! அப்படினு நெனச்சு இருந்தா அது அந்த பொண்ணு தப்புதான்......... 


அந்த நேரத்துல அவன் வந்ததே பெருசு? எல்லோரும் அவங்க அவங்க வீட்டை மட்டும் 
பாக்கும் போது , அவன் காப்பாற்ற போனதே பெரிய விஷயம் . 

அப்ப அந்த பொண்ணை அவன் வார்த்தை பேசலையானு! என்னை கேட்கறதை விட ! அவனை கேளுங்க?

அவன் நம்பர் 8973785349. 
பேரு ஆனந்த் , BBM(final year) சேரன் கலை அறிவியல் கல்லூரி திட்டுபாறை, காங்கயம் .

(மறக்காமல்  உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் . இந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்க்கு சொல்லவும் )

Thursday, 10 November 2011

பெண்களை தொடரும் தீண்டாமை !


தீண்டாமை ஒரு பாவ செயல் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

 தீண்டாமை இதற்கு அர்த்தம் தெரியாமல் பேசி விட்டு தன் வீட்டுக்கு சென்றார் ராசு . மதியம் நேரம் என்பதால் , சோர்வாக இருந்தது போல தன் மகள் பேரை சொல்லி மோர் கொண்டு வர சொன்னாரு அவரு. அப்ப வந்தால் அவன் மனைவி அவரை கடிந்து கொண்டே ...... 

அவகிட்ட எதுக்கு வேலை சொல்லறிங்க ...!!!! அவ சமையல் செய்யற பக்கமே போக கூடாது. நான் அவளுக்கு ரெண்டு நல்லா தனியா சாப்பாடு போடறேன் தெரியாத உங்களுக்கு........... 

மறந்துட்டேன் டி..... நீ போய் எடுத்துட்டு வா... 

மோர்  கொடுத்து விட்டு  பேச ஆரம்பித்தாள். இப்படியே இருந்தா எப்படி. ? அவளுக்கு கல்யாணம் பண்ண  வேண்டாமா?  எப்பதான் அவளுக்கு சீர் செஞ்சு முடிக்கறது.

பாக்கலாம்! பாக்கலாம் !

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மாத விலக்கு என்பது என்ன ?

பெண், அவளுக்கு உடம்பில் நடக்கும் ஒரு செயல். அவ்வளோதான் இதுக்கு போய் அவ இதை தொட கூடாது அதை தொட கூடாதுன்னு சொல்றது என்ன தான் நாகரிகமோ தெரியலடா சாமி ! இதை பத்தி தெரியாத ஆம்பளைங்க சொன்ன பரவ இல்ல . இதை அனுபவிக்கும் பொண்ணுக்கு கூடவா தெரியாம போகுது. ஏங்க நீங்க அனுபவிச்ச அந்த கொடுமையை உங்க பொண்ணும் அனுபவிக்கணுமா?

அந்த மாதிரி  காலத்தில் பெண்கள் பூக்களை தொட கூடாது , தனியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கொள்கைகள் கொலை செய்தால் மட்டுமே பெண்கள் விடுதலை செய்ய படுவார்கள். 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பூப்பு விழா ?

போக்குவரத்து இல்லாத காலத்தில் தன் பெண் திருமணதிற்கு தயார் என்பதை உறவினர்க்கு சொல்லும் நிகழ்ச்சி தான் இது. செல் போன் , வந்து விட்ட இந்த காலத்திலும் இந்த மாதிரி விழா நடப்பதை ஏற்று கொள்ள முடிவது இல்லை. தங்கள் பெண்களை தாங்களே அசிங்க படுத்தும் நிலை மாறாமல் எப்படி நாடு முன்னேறும். 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  - - - - - - - - - - - - - - - - -


மனிதன்  மூத்தரம் போவதும் , மலம் களிப்பதும் ,ஒரு செயல் . அது போலத்தான் இந்த மாத விலக்கு என்பதும். தெரியாமல் கிணற்றில் விழுவது ! புரியும் வரை நிற்க போவது இல்லை. 

                              

Tuesday, 8 November 2011

கம்ப்யூட்டர் பத்தி எல்லாம் தெரியுமா ?



முதல்ல உங்களுக்கு அத்தை பொண்ணு இருக்கா ?
 
இல்லேன்னா பரவா இல்ல விடுங்க ?

எனக்கு ஒரு அத்தை பொண்ணு இருக்கு . என்னதான் அத்தை பொண்ணு மொக்கைய இருந்தாலும் ! அதை ரெடி பண்ணனும்னு ஆசை இருக்கும் , ஆசை இல்லைன்னாலும் பரவா இல்லைங்க . எந்த பொண்ணு முன்னாடியும் அசிங்க பட யாரும்  நெனைக்க மாட்டாங்க. நானும் அந்த மாதிரி தான் இருந்தேன் . 

ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த மொக்கை பிகர் கூட பேசிட்டு இருந்தேன். அப்ப வந்தான் என் பங்காளி . நாம நல்லா இருந்தா பங்காளிக்கு புடிக்குமா. ஆரம்பத்துல நல்லா பேசினான். போக போக என்னை கால வாரா ஆரம்பிச்சுட்டான். 

அவன் வீட்டுலயும் கம்ப்யூட்டர் இருக்கு. நானும் வச்சு இருக்கேன். அவனுக்கு எல்லாமே என்னை விட கொஞ்சம் அதிகமா தெரியும். அந்த பாவி அந்த பொண்ணு முன்னாடிதான் அதை எல்லாம் காட்டனுமா?


என்ன என்னமோ கேக்க ஆரம்பிச்சுட்டான். படு பாவி அந்த பொண்ணு முன்னாடி கம்ப்யூட்டர் பத்தி எனக்கு தெரியாதது எல்லாம் கேட்டு , அந்த பொண்ணை என் பக்கமே திரும்பாத மாதிரி பண்ணிட்டான் . 

நான் பட்ட அசிங்கம் யாரும் பட கூடாது மக்களே !!!!!!!!!!!!


அதனாலதான் சொல்லறேன் . உங்க கம்ப்யூட்டர் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கங்க, அதுக்காக நான் உங்கள CPU'க்கு உள்ள  போக சொல்லல .


கம்ப்யூட்டர் உள்ள என்ன இருக்குனு தெரிஞ்சுக்க ......................

STARTRUN→dxdiag 

அவளோதான் உங்க கம்ப்யூட்டர் பத்தின எல்லா மேட்டரும் உங்க முன்னாடி வந்து விழும் . 




முக்கிய குறிப்பு : அத்தை பொண்ணு இருக்கறவங்க இதை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லது. 









  

Sunday, 6 November 2011

பஞ்ச் டைலாக் இல்லாத விஜய் படம் !


என்ன  சார் சொல்லறிங்க பஞ்ச் இல்லாத விஜய் படமா ?

ஆமா  சார்! விஜய் படம் தான் ! 

கனவா இருக்கும் சார் ?

இல்ல சார் .........  நான் பாத்தேன்னு சொல்லறேன்ல!

அப்ப தண்ணி அடிச்சு இருந்திங்களா?

வாங்கி குடுத்த மாதிரி பேசாத டா?

பின்ன என்ன சார் ? நம்பற மாதிரி எதாவது சொல்லுங்க !!!

இந்த படத்துல விஜய் டான்ஸ் கூட ஆடல !

அவருதான் படுத்து படுத்து ஆடுவரே என்ன ஆச்சு !

தெரியலப்பா

போங்க சார் எனக்கு நம்பிக்கை இல்லை !

நீ ஓவரதான்டா பேசற ! நீ பாத்துட்டு பேசுடா !!!

சார் சார் நான் வரல !

அப்புறம் என்ன மயிருக்கு கேட்ட!

இல்ல சார் பயமா இருக்கு. 

உயிருக்கு நான் பொறுப்பு வாடா....

நான் புள்ளை குட்டிக்காரன் சார் ! உங்கள நம்பித்தான் வரேன் . 

மூடிட்டு வாடா!!!

கடைசியா ஒரு கேள்வி ? பாக்கற மாதிரி இருக்குமா ?  

பாத்துட்டு நீயே சொல்லு !



ஆமா சார் பஞ்ச் இல்ல , டான்ஸ் இல்ல ! என்ன சார் இது !

வரமாட்டேனு சொன்ன !

தப்புதான் சார் . ஆனா கண்டிப்பா நூறு நாள் ஓடும் சார்!

அட நாசமா போனவனே ! இது விளம்பரம் டா ?

அப்ப இந்த படமும் ஓடாதா ?


இவனுக்கு  என்ன சார் பதில் சொல்லறது! நீங்களே சொல்லுங்க 

Saturday, 5 November 2011

மயக்கம் என்ன ?

                                     
                                    செல்வராகவன் , தனுஷ் சேர்ந்து வேலை செய்துள்ள மூன்றாவது படம் , மயக்கம் என்ன ?. பெருத்த எதிர் பார்ப்பு இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தான் படத்தின் எதிர் பார்ப்பை அதிகப்படுத்துகிறது. தனுஷ் புகை பிடிக்கும் இடத்தில இருந்து, கார்த்திக் ஜாக்கரதை என்று பலகை அடிக்கும் வரை அவரை மட்டும் பார்க்க வைக்கறது. நாயகி இடம் "இப்ப எதுக்கு டி என்னை  பத்த" என்று கேட்கும் இடத்தில , அந்த குறும்பு மட்டும் இன்னும் போகாம இருக்கு. 

                                      ஏதோ காதல் கதை தான் என்றாலும் அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை வராமல் இல்லை. 

                                      இனி நாயகி பத்தி பேசலாம் . ரோட்ல போகும் போது சைட் அடிக்கற பொண்ணு மாதிரி இருக்குப்பா இந்த பொண்ணு .........
வாய்ல வெரல் வசுகிட்டு அழும் போது யார் டா இந்த பொண்ணை அடிச்சதுன்னு கேக்க தோணுது . இந்த பொண்ணும் கண்டிப்பா பத்து படம் பண்ணும் . தனுஷ் மேல கால துக்கி போடும் இடம் என்னமோ  கேக்குதுங்க   நம்ம மனசு . ஆரம்பத்தில் தனுஷை பாக்கும் போது நமக்கே அந்த பொண்ணை ரெடி பண்ணும் போல இருக்கு. படம் எப்ப வந்து நாம எப்ப அந்த பொண்ணை சைட் அடிக்கறது. அட போங்க இந்த பொண்ணுகளே இப்படிதான் ..... 
இந்த படத்தின்  டிரைலர்;




படத்தின் விபரங்கள் ;
Directed bySelvaraghavan
Story bySelva Ragavan
StarringDhanush
Richa Gangopadhyay
Music byG. V. Prakash Kumar
CinematographyRamji
Editing byKola Bhaskar
StudioAum Productions
Distributed byGemini Film Circuit
Release date(s)25 November 2011[1]
CountryIndia
LanguageTamil