Thursday, 10 November 2011

பெண்களை தொடரும் தீண்டாமை !


தீண்டாமை ஒரு பாவ செயல் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

 தீண்டாமை இதற்கு அர்த்தம் தெரியாமல் பேசி விட்டு தன் வீட்டுக்கு சென்றார் ராசு . மதியம் நேரம் என்பதால் , சோர்வாக இருந்தது போல தன் மகள் பேரை சொல்லி மோர் கொண்டு வர சொன்னாரு அவரு. அப்ப வந்தால் அவன் மனைவி அவரை கடிந்து கொண்டே ...... 

அவகிட்ட எதுக்கு வேலை சொல்லறிங்க ...!!!! அவ சமையல் செய்யற பக்கமே போக கூடாது. நான் அவளுக்கு ரெண்டு நல்லா தனியா சாப்பாடு போடறேன் தெரியாத உங்களுக்கு........... 

மறந்துட்டேன் டி..... நீ போய் எடுத்துட்டு வா... 

மோர்  கொடுத்து விட்டு  பேச ஆரம்பித்தாள். இப்படியே இருந்தா எப்படி. ? அவளுக்கு கல்யாணம் பண்ண  வேண்டாமா?  எப்பதான் அவளுக்கு சீர் செஞ்சு முடிக்கறது.

பாக்கலாம்! பாக்கலாம் !

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மாத விலக்கு என்பது என்ன ?

பெண், அவளுக்கு உடம்பில் நடக்கும் ஒரு செயல். அவ்வளோதான் இதுக்கு போய் அவ இதை தொட கூடாது அதை தொட கூடாதுன்னு சொல்றது என்ன தான் நாகரிகமோ தெரியலடா சாமி ! இதை பத்தி தெரியாத ஆம்பளைங்க சொன்ன பரவ இல்ல . இதை அனுபவிக்கும் பொண்ணுக்கு கூடவா தெரியாம போகுது. ஏங்க நீங்க அனுபவிச்ச அந்த கொடுமையை உங்க பொண்ணும் அனுபவிக்கணுமா?

அந்த மாதிரி  காலத்தில் பெண்கள் பூக்களை தொட கூடாது , தனியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கொள்கைகள் கொலை செய்தால் மட்டுமே பெண்கள் விடுதலை செய்ய படுவார்கள். 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பூப்பு விழா ?

போக்குவரத்து இல்லாத காலத்தில் தன் பெண் திருமணதிற்கு தயார் என்பதை உறவினர்க்கு சொல்லும் நிகழ்ச்சி தான் இது. செல் போன் , வந்து விட்ட இந்த காலத்திலும் இந்த மாதிரி விழா நடப்பதை ஏற்று கொள்ள முடிவது இல்லை. தங்கள் பெண்களை தாங்களே அசிங்க படுத்தும் நிலை மாறாமல் எப்படி நாடு முன்னேறும். 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  - - - - - - - - - - - - - - - - -


மனிதன்  மூத்தரம் போவதும் , மலம் களிப்பதும் ,ஒரு செயல் . அது போலத்தான் இந்த மாத விலக்கு என்பதும். தெரியாமல் கிணற்றில் விழுவது ! புரியும் வரை நிற்க போவது இல்லை. 

                              

1 comment: