Friday, 22 June 2012

ஆண் பாவம்............1




பெண் கொடுமை...... பெண்கள் பாவம்......... பெண்கள் அடிமை படுத்தப்படுகிறார்கள்.......

இதை சொல்லி சொல்லியே பசங்கள தான் கொடுமை படுத்தராங்க...........

பசங்க அவஸ்த்தையை யாராவது பேசி இருக்காங்களா..... இல்லை யோசிச்சுத்தான் பாத்து இருக்காங்களா?

பசங்க........

1. வீடு

2. காதலி

3. பொண்டாட்டி

இது 3 தான் பசங்க வாழ்க்கை...... பாக்கறதுக்கும் பேசறத்துக்கும் நல்லாத்தான் இருக்கும்......

நீங்க பையனா ? அப்படினா இதை படிக்க வேண்டாம்.... பொண்ணுக மட்டும் படிக்கட்டும் .... நம்ம அவஸ்த்தைதான் நமக்கே தெரியுமே......

இப்ப 1 வீடு.........

பசங்கனா ஜாலியா ஊரு சுத்துவாங்க கவலையே இல்லை .....

யாருங்க அப்படி சொன்னா.....

நைட் எங்க போனாலும் அப்பாக்கிட்ட இருந்து சரியா 9 மணிக்கு போன் வந்துரும் .......

ஏன் நைட் தான் ஊரு சுத்தனுமா பகலுல சுத்தலாமல்ல ....

இந்த கேள்வி கரெக்ட்டுதான் ..... என்ன பண்ணறது.... பகல சரக்கு அடிச்சுட்டு வீட்டுக்கு போனா கண்டு புடிச்சுருவங்களே

சரிங்க அப்படி பகல்லுல என்னத்தான் பண்ணறீங்க..........

அப்படி கேளுங்க.... கரெண்ட் பில் , மார்க்கெட் போய்ட்டு வரணும் , இங்க எல்லாம் போய்ட்டு வந்தாலும் அப்பாக்கிட்ட கரெக்ட்டா கணக்கு

காட்டணும்.....

இதுலயும் அக்காவோ தங்கச்சியோ இருந்தா அவ்வளோதான் ....

பசங்க நிம்மதியே போச்சு.......

ஏன் ?

நம்மல விட அவங்க கொஞ்சம் ஏன் நம்மல விட நல்லாவே படிப்பாங்க....

அதை விடுங்க நாம அடிக்கற தம் , தண்ணி எல்லா மேட்டரும் அவங்களுக்கு தெரிங்சுரும்

மறைக்கவே முடியாது..... அங்க அங்க ஆள் போட்டு வச்சு இருப்பாங்க..... என்ன பண்ணறது அவங்களுக்கு அடங்கித்தான் போகணும்....

அப்படியும் மீறீ அவங்கள அடிச்சா அவளோ தான்.... நம்ம சொந்தக்காரன் எல்லாம் போன் பண்ணி அட்வைஸ் பண்ணுவாங்க....

அட போங்க இப்ப சொல்லி இருக்கறது கொஞ்சம்தாங்க இன்னும் விவரமா சொன்னா அவ்வளோதான்......

இப்ப இது போதும் அடுத்து காதலி பத்தி ............. நெஃஸ்ட்

Tuesday, 15 May 2012

பசங்க 2


காலைல எந்திரிச்சு இப்படி எப்பவம் ஓடினது கெடையாது....

இப்ப ஓடிட்டு இருக்கேன்............

யப்பா இப்படி மூச்சு வாங்குது....... எனக்கு முன்னாடி ஒரு பெரியவரு ஓடிட்டு இருக்காரு....

அவருக்கு வயசு 50 இருக்கும்........ எனக்கு 20 தான்........

அது எப்படி அவரு எனக்கு முன்னாடி ஓடலாம்.... இன்னும் கொஞ்சம் வேகமா ஓடினேன்....

அவரை தாண்டி ஓடும் போது சிரிச்சாரு?

எனக்கும் தான் சிரிப்பு ........ அவரை ஜெய்ச்சுட்டோம்மல்ல்..............

அதுக்கு அப்பறம் 5 நிமிசம் தான்.......

எனக்கு முன்னாடி நெறைய பேர் ஓடராங்க.....

எல்லாருக்கும் வயசு 30 இல்லைனா அதுக்கும் கம்மியாதான் இருக்கும் .

இவங்களை எப்படி ஜெய்க்கரது......

அட போங்கடா ................................ உக்காந்துட்டேன்...........

பின்னாடி வந்த அந்த பெரியவரும் என் பக்கத்துல நின்னு கை காலும் ஆடிக்கிட்டு இருந்தாரு....

என்னப்பா உனக்கு முன்னாடி இத்தனை பேர் ஓடராங்க....? கேட்டார் அந்த பெரியவர்..

...................................?(சிரித்தேன்)

இன்னைக்குத் தான் பர்ஸ்ட் டைம் ஓடரயா?

ஆமாங்க...!

நான் கெழவன் என்னை முந்தி வந்துட ..................... இன்னைக்கு வந்துட்டு எல்லாத்தையும் முந்தி ஓடணும்னா? முடியுமா?

என்ன பெரியவரே ... இந்த வயசுல எல்லாத்துக்கும் புத்தி மதி சொல்லணும்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? நான் இப்ப

எதிர்திசைல ஓடினா... நீங்க எல்லாம் எனக்கு பின்னாடி தானே? புதுசா சொல்லி குடுங்க எப்ப பாத்தாலும் குத்தம் சொல்லிக்கிட்டே

இருக்கறது.

.....................?????????

தம் அடிக்கறீங்களா? பேசமா போனா என்ன அர்த்தம் ... சொல்லறதுக்கு எதாவது புத்தி மதி இருக்கா?


(1 : அப்பு இவனுக சும்மா இருக்கறதால தான்  வம்மு தும்மு பண்ணிட்டு இருக்காங்க?
 2 : அதுக்கு என்ன பண்ண சொல்லறீங்க ?
கை புள்ள : பேங்க் ஒன்னு கட்டி விடுங்க நடத்தரோம்................ )

Wednesday, 11 April 2012


பசங்க - 1.........?

இரவு 7.30

நான் என் நண்பன் வீட்டில் இருந்தேன்... அரக்க பறக்க ரெடி ஆனான்....

காரணம் புரியாமல் நான் புத்தகத்தை பொரட்டி கொண்டு இருந்தேன்.... வண்டியில் எறி உக்கார சொன்னான்.

நானும் உக்காந்தேன்..... அது தானே நண்பனுக்கு தர மரியாதை...!

நேராக வண்டி பஸ் ஸ்ட  ண்டுக்கு போனது .........

அங்கே அவனது தோழியின் அம்மா..............

அவன் மட்டும் சென்றான்...............

15 நிமிடம் அங்கு சென்றது.... உடன் சென்ற பாவத்துக்கு வேடிக்கை பத்துட்டு இருந்தேன்.....

என்னை பத்தி அவனுக்கு என்ன கவலை......

திரும்பி வரும் போது..................

நான்    : மச்சி இதுக்கா இப்படி வந்த ..... நீ குழிச்சு நான் பாத்ததே இல்லையே டா?

அவன் : அதுக்குன்னு அப்படியே போக சொல்லறியா டா மச்சி....?

நான்  :ஏன் டா?

அவன்: அவங்க என்னை பத்தி என்ன நெனைப்பாங்க ?

நான்:  என்ன நெனைப்பாங்க ?

அவன்: உனக்கு புரியாது டா? சரக்கு அடிக்கலாமா?

நான்: சரக்கு அடிச்சுட்டு எங்க போரது டா?  8 மணி டா.....

அவன்: உங்க வீடுக்கு போகலாம் டா........?

நான்: சரக்கு அடிசுட்டு எங்க வீட்டுக்கு போன எங்க அம்மா தப்பா நெனைக்க மாட்டங்கலா டா?

அதுதான் கடைசி அதுக்கு அப்பறம் அவன் என்னை எங்கயும் கூப்பிடறது இல்லை.....

இதுல  ஸ்டைல்க்கு ஒன்னும் கொரைச்சல் இல்லை
நான் கேட்டது என்ன தப்புனுதான் தெரியலை...........