Friday, 18 November 2011

taare zameen par (2007)





உங்கள் வீட்டில் நீங்கள் , அண்ணன் , அப்பா,அம்மா . அப்பா அலுவலக பணி.அண்ணன் நீங்கள் படிக்கும் பள்ளியில் உயர் வகுப்பு படிக்கிறார் . அம்மா உங்கள் அனைவர்க்கும் வேலை செய்வது அவரது வேலை. அவர் உங்கள் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார் .

நாம் இப்போது  உங்களை பற்றி மட்டும் பேசுவோம் . எதையாவது வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து பார்க்கும் நீங்கள் , இந்த படிப்பில் மட்டும் தத்தி, சரக்குக்கு ஊறுகாய் போல்  பள்ளியில் அனைத்து ஆசிரியர் கோவதிற்கும் நீங்கள் தான் ஊறுகாய். 

நீங்கள் வேணும் என்றே படிக்காமல் இல்லை . நீங்கள் புத்தகம் பார்த்து படிக்கும் போது,எழுத்துகள் நடனம் ஆடுவது போல் தோன்றுகிறது ,இதற்கு கரணம் dyslexia என்னும் நோய் . இது ஒன்றும்  புற்று நோய் போல இல்லை. நீங்கள் படிக்கும் போது உங்களால் கவனம் செலுத்த முடியாது.மூளையின் தடு மாற்றமே காரணம். இதனால் உங்கள் அப்பா உங்களை
 வேறு பள்ளியில் ஹொஸ்டலில் சேர்கிறார் .


படிகின்ற மாணவன் அருகே உக்கார வைக்கிறார்கள்.

ஏன்டா? எங்க உக்காந்தாலும் என்னால முடிஞ்சா தான்டா படிக்க முடியும்.
நீங்கள் சொல்வதை கேட்க யாரும் இல்லை.   


அம்மாவின்  பிரிவு, எழுத்துகள் நடனம், இதனால் அங்கும் நீங்கள் தான் ஊறுகாய்.
                                      

இப்போது ஹீரோ வருகிறார். 


நீங்கள் பார்த்து  வந்த ஹீரோ எப்படி இருப்பார், நாலு சண்டை, மூணு லவ் சாங்.நாயகியை 
கட்டிபிடித்து உதட்டுடன்
உதடு சேர்த்து ஒரு முத்தம். படம் முடியும் போது அவர் ஜெயித்து இருப்பார் .


இவர் அப்படி இல்லை. படத்தின் இடை வேளை பிறகு தான் வருகிறார். 
அமீர்கான், ஆம் அவர்தான் .கலகலப்பான  ஓவிய ஆசிரியர் , 
உங்களை அவர் புரிந்து கொள்கிறார் . ஏனெனில் அவர்தான்டா ஹீரோ. அவரும் 
புரிஞ்சுகலேன்னா நீ என்ன பண்ணுவ? 


என்ன ஆனது என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .........

நானே எல்லாம் சொல்லிட்டா நீங்க எப்பதான் படம் பாக்கறது. படம் பார்க்க 
ஆசை படுபவர்கள் என்னை தொடர்பு 
கொள்ளவும் . இல்லை என்றால் எளிமையான வழி, கடையில் வாங்கி கொள்ளவும். 

அந்த பையனின் நடிப்பு மட்டுமே இந்த படத்தை, அழகாக காட்டுகிறது. அமீர்கான் 
அவரின் படம் தான் இது. தொப்புள்,தொடை காட்டும் நாயகி இல்லாதது இந்த படத்தின் வெற்றி. 


பார்க்க வேண்டிய அரிதான படங்களுள் இதும் ஓன்று. 


படத்தை  பற்றி மேலும் தெரிந்து கொள்ள ....

(மறக்காமல் கருத்து தெரிவிக்கவும் ,)

1 comment: